ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை வடபழனிமுருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகையையொட்டி சென்னை வடபழனியில் உள்ள பழனியாண்டவர் கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமியை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சென்னை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. இதனால், ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.