செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே, மாணவர்களால் போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் என, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி தெரிவித்தார்.
பின்னர் பேட்டியளித்த சைலேந்திரபாபு, போட்டித் தேர்வுகளில் சாதித்த மாணவர்கள் ஒவ்வொருவரும், சமூக வலைதள பயன்பாட்டை முற்றிலுமாக தூக்கி எறிந்துதான் தேர்வுகளில் சாதித்ததாகவும், சாதிக்க நினைக்கும் மாணவர்களும் இதை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.