மக்கள் வரிப்பணத்தை சூறையாடிவர்களுக்கு மத்திய அரசை குறை சொல்ல தகுதியில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எம்பி-க்களை கூட்டி, II ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து 11 வருவதாக வழக் கம் போல வெறுப்பு அரசியல் பேசி தீர்மானம் நிலை றவேற்றி இருக்கிறார்.
கடந்த மே மாதம் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறு த்தியதாக தெரிவித்துள்ளார். கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாக கூறி இவரது தந்தை, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் காலம் முதல் திமுக தமிழகத்தை ஏமாற்றி வருகிறது.
கூவம் ஆறு சுத்தப்படுத்தும் திட்டத்தைக் காட்டியே பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்டனர். ஆண்டுகள் பல உருண்டோடினாலும், தமிழக மக்களுக்கு நாற்றமடி-க்கும் கூவம் ஆறு தான் மிச்சம். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டியவர்கள். இன்று வைகை, தாமிரபரணியை சுத் தப்படுத்துவதாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட முடியுமா என்று அலைகின்றனர்.
ஒவ்வொரு பிரச்சனையிலும் மத்திய அரசிடம் கேட்டு விட்டோம் செய்யவில்லை என்று பழிபோட்டு தப்பி -த்துக் கொள்ளலாமென முதலமைச்சர் எண்ணுகிறார். ஆனால், தமிழக மக்கள் அவரிடம் கேட்கும் கேள்வி இது தான்.
தமிழகத்தை ஆட்சி செய்ய திமுக-வை தமிழக மக்கள் தேர்ந்தெடு-த்தது எதனால்? எதுவும் செய்ய முடியாத நீங்கள் தேர்தலில் நிற்பது எதற்காக?
வெற்றி பெறுவது எதற்காக?
ஆட்சி அதிகாரத்தை கைபற்றி குடும்பத்தை வளப்படுத்துவதற்கா-கவா? தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று வழக்கம் போல் தீர்மானம் கொண்டு வந்துள்ள நீங்கள், எந்த நிதி தரவில்லை என கூறுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் பலமுறை கேள்வி கேட்டு விட்டார்.
ஆனால் இவர்களிடம் பதில் இல்லை. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு. தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது. ஆனால் 2004 முதல் 2014 வரை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமைய -“லான அப்போதைய மத்திய அரசு தமிழகத்திற்கு செய்தது என்ன? திமுகவிற்கு அதைக் கூற திராணி இருக்கிறதா?
அதுமட்டுமல்லாமல். தற்போது மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்ற 11 லட்சம் கோடி ரூபாயில் தமிழகத்தில் நிறைவேற்ற -ப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன? முதலமைச்சரும். மாவட்டம் டம் தோறும் வாரி வாரிசு அரசியலை வளர்த்து குட்டி ஜமீன்-தார்களாக வலம் வரும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலை-வர்களும் சேர்ந்து, தமிழகத்தை கொள்ளையடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டுகின்றனர். சூறையாடி இது தான் இவர்கள் தமிழகத்திற்கு செய்து வருவது மக்கள் நலப்பணியா?
மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேச திமுகவினருக்கு எந்தத் தகுதியும் நால்லை. இந்தி தினிப் இந்தி திணிப்பை கைவிட வேண்டும். கீழடி ஆய்வை மத்திய அரசு மறுக்கிறது என வழக்கமான பல்லவியை பாடி எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
திமுகவினரின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்ப போவதில்லை என்றும், திமுகவினரின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்ப போவதில்லை என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.