கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றாலம் சாரல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு திருவிழா, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக தொடங்கியுள்ளது.
இதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மலர்களைக் கொண்டு அருவி, யானை, குரங்கு, பறவை வடிவங்களும் ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட 18 வாசனை பொருட்களைக் கொண்டு பிரமாண்ட வண்ணத்துப் பூச்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார். வரும் 24-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது.