திருச்சி துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகரை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்தி நிறுத்தினர்.
மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த நரிக்குறவர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயல்வதாக இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுராபுரி பகுதிக்குச் சென்றபோது கிறிஸ்தவ மதபோதகர் வின்சென்ட் என்பவர், நரிக்குறவர் இன மக்களிடம் பிரச்சாரம் செய்தது அம்பலமானது. தொடர்ந்து மதபோதகரை வெளியேறுமாறு இந்து முன்னணி அமைப்பினர் கூறிய நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற மக்களில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து சென்ற போலீசார், மதபோதகரை எச்சரித்து அனுப்பினர். நரிக்குறவர் இன மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிக்கும் கும்பலை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.