திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பகுதி சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்..
வடிகால் கால்வாய்களை முறையாக அமைக்காததால் மழைநீர் தேங்குவதாக குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்…