கோவை மாவட்டம் சோமனூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.
சோமனூரில் உள்ள செல்வ விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சாம்சங் பம்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிவாசகன் தலைமை தாங்கினார். குருபூஜை விழாவை காமாட்சிபுரி ஆதீனம் 2-ஆம் குருமகா சன்னிதானம் சாந்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கி தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய கோவை கோட்ட ஆர்.எஸ்.எஸ் இணை செயலாளர் விஜய், பாரம்பரிய வாழ்வியல் முறைகளை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஒற்றுமையான குடும்ப வாழ்க்கை முறையை அடுத்த தலைமுறைகளுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.