அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்த அன்வர் ராஜா, எம்ஜிஆரின் மறைவுப் பிறகு அதிமுக உடைந்தபோது ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்றார்.
பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜா, சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனை அடுத்து கடந்தாண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், முன்னாள் எம்பி அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவதற்காக அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.