கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு - முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!
Oct 22, 2025, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு – முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின், வறுமையைப் பயன்படுத்தி, திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் என்ற நபர் மூலம் நடைபெற்றுள்ள கிட்னி திருட்டு, நாட்டையே அதிர வைத்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தும், திமுகவினருக்குத் தொடர்புடைய இன்னும் சில மருத்துவமனைகளில் வைத்தும் தான், தங்களுடைய கிட்னி எடுக்கப்பட்டது என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துச் செய்திகள் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும், கிட்னி திருட்டில் புரோக்கராகச் செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தனை, திமுக அரசு கைது செய்யவில்லை. தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகக் காவல்துறை கூறி வருகையில், அந்த நபர், அவரது வீட்டருகே இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என, பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருக்கின்றனர். திமுக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே, அவர்கள் இத்தனை தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணம்.

அதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது போலச் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகக் காவல்துறை செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில், கந்து வட்டி தடைச்சட்டம் உள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில், கிட்னி திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், கந்து வட்டி கடனைத் தீர்க்கவே சட்டவிரோதமாகக் கிட்னி விற்பனை செய்ய முன்வந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருடும் கும்பலில் சிக்க வைத்தது என, இந்த ஒட்டுமொத்த வலைப்பின்னலும், பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது

உடல் உறுப்பு திருட்டு என்பது, உலக அளவிலான பெரும் குற்றங்களில் ஒன்று. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு குறித்த செய்தி வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும், திமுக அரசு இத்தனை மெத்தனப் போக்கில் செயல்படுவது, இந்தக் குற்றத்தில், திமுக புள்ளிகளுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக கூறியுள்ளார்.

திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன், தனி நபராக இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் தாமதிக்காமல், உடனடியாக, சிறப்புப் புலனாய்வுப் படை அமைத்து, இந்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதோடு, இதில் தொடர்புடைய நபர்கள், மருத்துவமனைகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalaiDMK executive Dravida Anandankidney theft issueThanalakshmi Srinivasan Medical College Hospital
ShareTweetSendShare
Previous Post

சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமை – வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Next Post

ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies