ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 40 நிமிடங்களுக்கு இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு 180 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், சுமார் 40 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம், பின்னர் பத்திரமாக ரேணிகுண்டாவில் தரையிறக்கப்பட்டது.
பின்னர், வேறு விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.