புதுக்கோட்டையில் நடந்த திமுக வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒருவருக்கு 3 பதவியா எனக்கூறி நிர்வாகிகள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை மாநகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு மாநகர செயலாளராக ராஜேஷ் என்பவரையும், வடக்கு மாநகர செயலாளராகப் புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாவட்ட பொருளாளராக உள்ள லியாகத் அலியை நியமனம் செய்து திமுக தலைமை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் வட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், மாநகர செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள லியாகத் அலி, மாவட்ட பொருளாளர் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போர்க்கொடி எழுப்பி நிர்வாகிகள் அமளியில் ஈடுபட்டனர்.