இத்தாலியில் நடைபெற்ற கார் ரேசின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது.
இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ரேஸில் ஈடுப்பட்ட அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கிய நிலையில் நல்வாய்ப்பாகக் காயமின்றி அவர் தப்பினார்.
வளைவில் வேகமாகத் திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது.
சர்க்யூட்டில் சிதறிக் கிடந்த கார் பாகங்களை ஊழியர்களுடன் இணைந்து அஜித்குமாரும் அப்புறப்படுத்தினார்.