அமிதாப் பச்சனின் Don படத்தை இயக்கிய இயக்குநர் சந்திரா பரோட் காலமானார்.
1978ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சந்திரா பரோட் இயக்கிய டான் படம் பல மொழிகளில் ரீமேக் செய்து வெளியானது. 86 வயதான சந்திரா பரோட் கடந்த 7 ஆண்டுகளாக நுரையீரல் பிரச்சனைக்குச் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பு இந்தி திரையுலகைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.