நெல்லையில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. நெல்லை நகர கிளை சார்பில் நடைபெற்ற குருபூஜை விழாவுக்கு, ஷிவ் டிரேடர்ஸின் நிர்வாக இயக்குநர் துரை தலைமை தாங்கினார்.
S.K.M. குழுமத்தின் நிறுவனர் சிவக்குமார் சிறப்புரையாற்றிய நிலையில், ஷேத்ர கார்யகாரி சதஸ்ய தென்பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ இராம இராஜசேகர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
குருபூஜை விழாவை, நகரக் கிளை நிர்வாகிகள் ஜெயசேகர், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த விழாவில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.