ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்காளரிடம் உள்ள செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணைப் பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடம் திமுகவினர் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களைச் சேகரிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், உறுப்பினர்கள் சேர்க்கைக்குத் தடை இல்லை என உத்தரவிட்டனர்.
ஆனால், செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணைப் பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, திமுக பொதுச்செயலாளர் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய ஆணையிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.