திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், வெல்லும் தமிழகம் தெருமுனை பிரச்சார கூட்டத்தை அர்ஜூன் சம்பத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், ஒரணியில் தமிழகம் என்றுகூறி முதல்வர் ஸ்டாலின், யாத்திரை தொடங்கி இருப்பதாகவும், ஆனால் தமிழகம் ஓரணியில் இல்லாமல் சீரழிந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.