பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தான் வசிக்கும் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அவர், அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு என்றும், அது விஷத்தன்மை வாய்ந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும், தன்னை போல யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.