அகமதாபாத் விமான விபத்து குறித்து இறுதி விசாரணை அறிக்கை வந்த பிறகே, என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியவரும் என, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, அகமதாபாத் விமான விபத்து குறித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், விமானத்தில் எரிபொருள் வால்வு அணைக்கப்பட்டதா என்பது இறுதி விசாரணையின் மூலமே தெரியவரும் எனக் கூறினார்.
அதேபோல் இறுதி விசாரணை அறிக்கை வந்த பிறகே என்ன நடந்தது என்பது பற்றிய விவரம் முழுமையாக வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தரவுகள் அடிப்படையில் உண்மையைக் கண்டறியும் முயற்சியில் விசாரணைக் குழு மற்றும் அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறிய ராம் மோகன் நாயுடு,
ஒருதரப்புக்கு ஆதரவாக விசாரணை நடைபெறுவதாகக் குற்றம் சாட்டுவது தவறானது என்றும் தெரிவித்தார்.