சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தலைசுற்றலால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.