இந்தியாவில் செயல்படும் தனது நயாரா நிறுவனம் மீதான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்டவிரோதமானவை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெப்ட், நயாரா எனர்ஜி ஓர் இந்திய நிறுவனம் என்றும், இதில் ரோஸ்நெப்ட்டுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் காரணங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை எனவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இத்தடைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.