திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தாராபட்டி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,
திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் 200 திருமண மண்டபத்திற்கு வணிக வரி விதிக்காமல் வீட்டு வரி விதித்துள்ளார்கள் என்றும் மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் ஆய்வு செய்திருக்க வேண்டாமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மதுரை மாநகராட்சியில் தோண்டத் தோண்ட ஊழல் வந்து கொண்டே இருக்கிறது என்றும் சுகாதாரத்தைப் பேணி காப்பதில் பின் தங்கி, இந்தியாவில் மதுரை மாநகராட்சி கடைசி இடத்தில் உள்ளது என்று செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.