தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன என்று குற்றம்சாட்டியவர், திமுகவினர் மக்களிடம் இருந்து OTP பெறக் கூடாது என்ற விவகாரம் நீதிமன்ற உத்தரவு – அதில் கருத்துக் கூற முடியாது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
பொதுவாகத் தேர்தல் நேரத்தில் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளிக்கும் என்றும் தற்போது தேர்தலுக்கு முன்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை திமுகவின் பரப்புரைக்காக முதல்வர் பயன்படுத்த நினைக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறியவர், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் செயல்பாடு மட்டுமே திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப போதுமானது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.