பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவி நீக்கம் செய்ய 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
அரசியலமைப்பின் பிரிவுகள் 124, 217 மற்றும் 218ன் கீழ் நீதிபதி வர்மாவுக்கு எதிராக நோட்டீஸ் சமர்ப்பிக்கப் பட்டது.
ஒரு நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் மக்களவையில் குறைந்தது 100 எம்பிக்களும், ராஜ்யசபாவில் குறைந்தது 50 எம்பிக்களும் கையெழுத்திட வேண்டும்.
இந்த தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.