உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்துள்ள மனுவில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவித்துள்ளார்.
அரசின் திட்டத்தை ஒரு தனிமனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது என குறிப்பிடப்பட்டுள்ள அவர், அரசியல் காரணங்களுக்காக அரசுப் பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
2026-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்தே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ள இனியன்,
உங்களுடன் ஸ்டாலின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற பெயரையும் திட்டத்திற்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.