ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் ஆளுங்கட்சியினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி சார்பில் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையத்தில் 98 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தப் புதிய பேருந்து நிலையம் வணிக வளாகம் போல் காட்சியளிப்பதாகவும், பேருந்துகள் நிறுத்துவதற்குப் போதிய இடமில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகராட்சி தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் ஏல முறையில் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, முறைப்படி மீண்டும் ஏலம் நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.