சென்னை பல்லாவரம் அருகே எருமை மாடு முட்டியதில் பள்ளி மாணவி காயமடைந்தார்.
அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்ற மாணவி, பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எருமை மாடு ஒன்று அவரை முட்டி கீழே தள்ளியது.
இதில், காயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.