மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உறவினர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வயதான மாயி – இருளாயி தம்பதியினருக்குக் குழந்தை இல்லாத நிலையில், கடந்தாண்டு புதிதாக வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் சிலர் தம்பதியின் புதிய வீட்டை அபகரித்துக் கொண்டு இருவரையும் வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மண்ணெண்ணெய் கேனுடன் விக்கிரமங்கலம் – உசிலம்பட்டி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தம்பதிக்கு ஆதரவாகப் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தம்பதி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.