காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கோயிலுக்குச் சொந்தமான அரசு நிலத்தைத் தனியாரிடம் இருந்து நகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
இளநீர் குளம் பகுதியில் பூதபுரீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான 20 அடி அகலம் உடைய நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்து இருந்தனர்.
இந்த இடம் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கால்வாய் இடம் என்பதால் சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.