நடிகை ஹன்சிகா மோத்வானி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி.
இவர் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹல் கதூரியா என்பவரை கரம் பிடித்தார்.
பின்னர் இருவரும் மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறினர். இதற்கிடையே ஹன்சிகாவும், அவரது தாயும் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவரது நாத்தனார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹன்சிகா விவாகரத்து முடிவில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.