புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் கொலை வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உமாசங்கர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடுரோட்டில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனக்கூறி உமாசங்கரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியும், வழக்கு தொடர்பான ஆவணங்களை 2 வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.