சென்னை நுங்கம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இயந்திரம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பூமிக்கடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளம் தோண்டும் பணிக்காகப் பெரிய இயந்திரம் கொண்டுவரப்பட்டது.
அந்த இயந்திரம் திடீரென இயந்திர கோளாறு காரணமாகச் சாலையின் நடுவே நின்றுவிட்டது. இதனால், உத்தமர் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்தபடி பயணித்தன.
















