பிரேசிலில் காணாமல் போன பெண்ணின் உடலைச் செய்தியாளர் கண்டுபிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரேசிலின் பகாபலில் உள்ள மீரிம் ஆற்றில் ரைசா என்ற இளம் பெண் காணாமல் போனார். இதுகுறித்து கடந்த ஜூன் 30-ம் தேதி உள்ளூர் ஊடகத்தைச் சேர்ந்த லெனில்டோ ஃப்ராசாவோ எனும் செய்தியாளர் ஆற்றில் இறங்கி நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது காலில் ஏதோ தட்டுப்பட, பயந்துபோன லெனில்டோ அது மீனாக இருக்குமோ என ஒளிப்பதிவாளரிடம் கேட்டார்.
பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது லெனில்டோ குறிப்பிட்ட இடத்தில், காணாமல் போன பெண்ணின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.