இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்கப்போவதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த முயன்று வரும் அமெரிக்கா, ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளின் பக்கம் அமெரிக்க அரசு தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.
இந்நிலையில் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார்.