நெல்லையில் சொரிமுத்தையனார் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு தனியார் வாகனங்கள் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் வரும் 24ம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இதுவரை அரசு வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.