நிறவெறிக்கு எதிராக காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங் ஜூனியரின் படுகொலை தொடர்பான 6,000-க்கும் மேற்பட்ட ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
இதே போல வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஹிலாரி கிளிண்டன், வகைப்படுத்தப்பட்ட தகவல்களை முறையற்ற முறையில் கையாண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களையும் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக ஒரு கதையை உருவாக்க அதிகாரிகள் முயன்றனர் என டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்தே தற்போது ஹிலாரி கிளிண்டன் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.