விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இம்மாதம் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கவுள்ளார். இதையொட்டி, விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2 நாள் பயணமாக இம்மாதம் 26-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் திறந்து வைக்கிறார்.
இதை முன்னிட்டு விமான நிலைய வளாகத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகின்றன. இதனால், விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.