உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் ரயில் பயணியிடம் இருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜான்சியில் இருந்து பீகார் நோக்கிப் பயணித்த ஓம்பிரகாஷ் சவுத்ரி என்ற பயணியின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த இரு டிராலிகளில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இரு டிராலிகளில் இருந்த ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கத்தைப் பறிமுதல் செய்த போலீசார், ஓம்பிரகாஷ் சவுத்ரியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.