பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் உஸ்தாத் பகத்சிங் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிகை ராஷி கண்ணா இணைந்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா, கடைசியாக தமிழில் அகத்தியா படத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது ‘தெலுசு கதா’ என்ற தெலுங்கு படத்திலும், ‘பார்ஜி-2’ என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையிலேயே உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்துள்ள ராஷி கண்ணா, ஸ்லோகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.