தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா, போதை போன்ற பழக்கத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாகத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா, போதை பழக்கத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் திருவள்ளூரில் மேலும் 3 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
குற்ற சம்பவங்களில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.