திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் அடையாளம் கண்ட போலீசார் போதை மீட்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதியின் புறநகர்ப் பகுதியான விநாயக நகர் அருகே ட்ரோன் கேமரா மூலமாக போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இளைஞர்கள் 3 பேர் போதை ஊசி செலுத்திக் கொண்டிருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவர்களின் பெற்றோரை வரவழைத்து போதை ஊசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைஞர்களுக்கு எடுத்துக் கூறினர். பின்னர் அவர்களைப் போதை மீட்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.