கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏ கதிரவனுக்கு சொந்தமானது எனவும், இவர்களை நம்பி வாக்களித்தால் உடல் பாகங்களை பார்ட் பார்டாக கழற்றி விடுவார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பேசிய அவர், திமுக ஆட்சியில் கிட்னி திருடுவதால் மருத்துவமனைக்கு செல்லக்கூட பயமாக உள்ளதாகவும், கிட்னி திருட்டில் மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ-வின் மருத்துவமனைக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறினார்.
“நம்பி வாக்களித்து ஜெயிக்க வைத்தால் உடல் பாகங்களை பார்ட் பார்டாக கழற்றி எடுத்து விடுவார்கள் என்றும் ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் சிறந்த மருத்து சேவை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மக்களின் துணையால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.