அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோற்றுப்போய் உள்ளதாகவும், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செல்லும் இடம் எல்லாம் மக்கள் அடித்து விரட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு வரும் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதனை ஒட்டி கங்கைகொண்ட சோழபுரம் அருகே ஹெலிகாப்டர் இறங்கும் தலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான ஹெச். ராஜா பார்வையிட்டு பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் செல்ல பயந்து சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மாதிரி திராவிட முன்னேற்றக் கழக தீய ஆட்சி அaகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். மக்கள் மிகவும் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.