பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் என்பவர் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நேர்மையாக பணியாற்றிய அதிகாரியை திமுக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக பணியிடை நீக்கம் செய்ததாக அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில், நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சி பாகுபாடு இன்றி பலரும் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.