காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
வஞ்சுவாஞ்சேரி பகுதியில் உள்ள வாடகை வீடுகளில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர், அதனை மாணவியின் வாட்ஸ் அப்-க்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்த நிலையில், இளைஞர் முகமது ஈக்லால்-ஐ கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.