சென்னை பூந்தமல்லி அருகே குப்பை கூளங்கள் நிறைந்த பகுதியில் கருணாநிதி சிலையைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது.
குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியை திமுகவினர் துணியைக் கொண்டு மறைத்த நிலையில், நிகழ்ச்சிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் சிலையைத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் அமைச்சர் நாசர் பொதுமக்களை அதட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.