சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 21-ம் தேதி அப்பெண் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த நபர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே அந்த நபர் தப்பியோடியுள்ளார். தொடர்ந்து பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.