பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்கதேச அணி கைப்பற்றியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டியில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் எடுத்தால் வெள்ளி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரைக் கைப்பற்றியது.