தோல்வி பயம் வந்து விட்டதாலும், தேர்தல் நெருங்கிவிட்டதாலும் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாகப் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்க வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மண்டல அலுவலரை முற்றுகையிட்டனர்.
சேப்பாக்கம் தொகுதியில் உள்ள தங்களுக்குக் கடந்த நான்கரை ஆண்டுகளாக மகளிர் உரிமத்தொகை கிடைக்காமல் உள்ளதாகத் தெரிவித்தனர். மகளிர் உரிமை தொகை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.
மேலும், தற்போது நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமும் தங்கள் பகுதியில் நடைபெறவில்லை எனப் பெண்கள் வேதனை தெரிவித்தனர்.