எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!
Sep 9, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணியின்  மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி யாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.

அந்தக்காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின் மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளிடமிருந்து முறையான வாடகை கூட வசூல் செய்யப்படுவதில்லை.

நிலைமை இப்படி இருக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தான் ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு கோயில் நிலத்தை சொந்தமாக்கி அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

ஏற்கனவே சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் வக்ஃபு வாரியச் சட்டத்தை தீவிரமாக எதிர்த்தவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தற்போது தமிழகத்தில் பல கோயில்களும் கோயில் நிலங்களும் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என சொல்லி ஆக்கிரமிக்க முயலும் சிறுபான்மையினருக்கு இது ஆதரவாக அமையாதா?

கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அந்த நிலத்தையும் கொடுத்து அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், வக்ஃபு நிலங்களிலும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான நிலங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம் என்று சொல்ல முடியுமா!

கோயில் நிலங்களை எடுக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர வேண்டும். எந்த ஒரு அரசும் நிரந்தரமல்ல. நேற்று இருந்த அரசு இன்று இல்லை. இன்று இருக்கும் அரசு நாளை இருக்காது. ஆனால் பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது கலாச்சாரமும் மட்டுமே. கோயிலையும், அதன் மூலமான கலாச்சாரத்தையும்
அரசியல் சுயநலத்திற்காக காவு கொடுப்பதை எந்த விலை கொடுத்தும் பக்தர்கள் தடுத்தே தீருவார்கள்.

ஆகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்லியிருப்பதை இந்து முன்னணி மிக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் இந்து முன்னணி பேரியக்கம் துவங்கிய காலம் முதல் கோயிலுக்கோ, கோயில் நிலங்களுக்கோ எந்த ஆபத்து வந்தாலும் அதை தடுப்பதை தலையாய பணியாக செய்து வருகிறது.

எனவே உடனடியாக திரு . எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தங்களின் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: epshindhu munnaniஎடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்அதிமுக பொதுச் செயலாளர்
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

Next Post

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies