அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காகத் தற்காலிகமாக வசிப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தாய் அல்லது தந்தையின் குடியுரிமை எந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது. ஆனால், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள், வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது என டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பை பெடரல் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.